Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • என்ஜினீயரிங் 2-ம் சுற்று கலந்தாய்வில், மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு

என்ஜினீயரிங் 2-ம் சுற்று கலந்தாய்வில், மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு

By: vaithegi Tue, 27 Sept 2022 12:51:48 PM

என்ஜினீயரிங் 2-ம் சுற்று கலந்தாய்வில், மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு

சென்னை: மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு ... தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 என்ஜினீயரிங் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு 148,811 இடங்கள் உள்ளன. இதையடுத்து இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கியது.

இதனை அடுத்து முதல்கட்ட கலந்தாய்வில் சிறப்புப் பிரிவினருக்கு 668 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதன்பின்னர் செப்டம்பர் 10-ஆம் தேதி தொடங்கிய பொதுப்பிரிவு கலந்தாய்வில் முதல் சுற்றில் பங்கேற்ற மாணவர்களில் 10,340 பேருக்கு இடங்கள் உறுதி செய்யப்பட்டன. எஞ்சிய இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு கடந்த 25-ஆம் தேதி தொடங்கியது.

engineering,time ,என்ஜினீயரிங் ,அவகாசம்

எனவே அதன்படி, மாணவர்கள் கல்லூரிகளை தகுதியின் அடிப் படையில் இணையவழியில் தேர்வு செய்து கொண்டு வருகின்றனர். இதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. எனவே, மாணவர்கள் விரைவாக கல்லூரி இடங்களுக்கான விருப்பப் பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு வரும் 28-ஆம் தேதி வெளியிடப்படும். அதற்கு மாணவர்கள் வரும் 29-ஆம் தேதிக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் கல்லூரிகளில் சேருவதற்கான சேர்க்கைக் கடிதம் மாணவர்களுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :