Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வங்கக்கடலில் வருகிற அக். 20 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு .. வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் வருகிற அக். 20 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு .. வானிலை ஆய்வு மையம் தகவல்

By: vaithegi Tue, 18 Oct 2022 12:02:34 PM

வங்கக்கடலில் வருகிற அக். 20 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு  ..   வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அக். 20 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு .... இன்றும் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் வருகிற அக் 20 ஆம் தேதி தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதனால் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாயுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

meteorological centre,bay of bengal ,வானிலை ஆய்வு மையம் ,வங்கக்கடல்

இதையடுத்து அது மட்டுமில்லாமல் அக் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.மேலும் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து அக் 21 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :