Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதற்கட்டமாக 5ஜி சேவைகள் 13 நகரங்களில் தொடங்கப்பட உள்ளது

முதற்கட்டமாக 5ஜி சேவைகள் 13 நகரங்களில் தொடங்கப்பட உள்ளது

By: vaithegi Tue, 09 Aug 2022 6:05:36 PM

முதற்கட்டமாக 5ஜி சேவைகள் 13 நகரங்களில் தொடங்கப்பட உள்ளது

இந்தியா : இந்திய நாட்டில் தற்போது 4ஜி நெட்வொர்க் சேவைகள் அனைத்து பகுதிகளிலும் வழங்கப்பட்டு கொண்டு வருகிறது. இதனையடுத்து 5ஜி அலைக்கற்றையின் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த 5ஜி சேவைகள் பயன்பாட்டுக்கு வந்தால் மொபைல்கள் மற்றும் பிற இணைக்கப்பட்ட சாதனங்களை சிறப்பாக கையாளலாம்.

மேலும் அத்துடன் இணைய வசதி பொறுத்தப்பட்ட சாதனங்கள் மற்றும் சேவைகளின் பயன்பாடு உயரக்கூடும். இதையடுத்து தற்போது வர இருக்கும் மொபைல்கள் 5ஜி நெட்வொர்க் சேவையுடன் வர உள்ளது.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 5ஜி அலைக்கற்றையின் ஏலம் நடைபெற்றது. இதில் ஜியோ, ஏர்டெல், அதானி குழுமம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பங்கேற்றன.

5g service,network , 5ஜி சேவை,நெட்வொர்க்

இதை தொடர்ந்து ஏலம் எடுத்துள்ள தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளுக்கு ஸ்பெக்ட்ரம் ஒப்புதல் மற்றும் ஒதுக்கீடு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நாட்டில் இதுவரை 5ஜி சேவைகள் வழங்குவது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

மேலும் இது தொடர்பாக தொலைத் தொடர்பு இணை மந்திரி தேவசின் சவுகான் கூறியிருப்பதாவது, நாட்டில் இன்னும் 1 மாத காலத்திற்குள் 5ஜி சேவைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் முதற்கட்டமாக 5ஜி சேவைகள் சென்னை, டெல்லி, காந்திநகர், குருகிராம், ஐதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே, அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர் உள்ளிட்ட 13 நகரங்களில் தொடங்கப்பட உள்ளது எனவும் கூறியுள்ளார்.

Tags :