Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதல்கட்டமாக 2½ லட்சம் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை .. செயல்படுத்த தமிழக அரசு திட்டமிடல்

முதல்கட்டமாக 2½ லட்சம் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை .. செயல்படுத்த தமிழக அரசு திட்டமிடல்

By: vaithegi Wed, 17 Aug 2022 10:13:12 AM

முதல்கட்டமாக 2½ லட்சம் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை ..  செயல்படுத்த தமிழக அரசு திட்டமிடல்

சென்னை: அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிவித்தது.

உயர்கல்வியில் மாணவிகள் அதிக அளவு எண்ணிக்கையில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இதை அடுத்து இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.

scholarship,government of tamil nadu ,உதவித்தொகை,தமிழக அரசு

இதனை தொடர்ந்து அதன்படி மாணவிகள் தங்களுடைய விவரங்களை பதிவு செய்தனர். இதையடுத்து சமீபத்தில் இதற்கான நிதியையும் ஒதுக்கி தமிழக அரசு, அரசாணையாக வெளியிட்டது.

இந்தநிலையில் முதல்கட்டமாக 2½ லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் ஒன்று வெளியாகி உள்ளன. இதனை அடுத்து படிப்படியாக இதன் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

Tags :