Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த 2 நாட்களில் இதுவரை இல்லாத அளவிற்கு மெட்ரோ ரெயில்கள் பயணிகள் பயணம்

கடந்த 2 நாட்களில் இதுவரை இல்லாத அளவிற்கு மெட்ரோ ரெயில்கள் பயணிகள் பயணம்

By: vaithegi Tue, 25 Oct 2022 2:24:47 PM

கடந்த 2 நாட்களில் இதுவரை இல்லாத அளவிற்கு  மெட்ரோ ரெயில்கள் பயணிகள் பயணம்

சென்னை: மெட்ரோ ரெயில்கள் அதிக அளவில் பயணிகள் பயணம் ....... தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதலாக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன. தீபாவளி கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு 20, 21 மற்றும் 22-ந்தேதிகளில் 5 நிமிடத்திற்கும் குறைவான இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன.

இதனை அடுத்து கூடுதலாக இயக்கப்பட்ட சேவைகள் மூலம் பொதுமக்கள் அதிகளவில் பயணித்துள்ளனர். இதனால் இதுவரையில் இல்லாத அளவிற்கு பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

metro trains,passengers ,மெட்ரோ ரெயில்கள்,பயணிகள்

அந்த வகையில் 21-ந்தேதி (சனிக்கிழமை) அன்று அதிகபட்சமாக 2 லட்சத்து 63 ஆயிரத்து 610 பேர் பயணம் செய்தனர். 20-ந்தேதி 2 லட்சத்து 48 ஆயிரத்து 556 பேர் பயணம் செய்தனர். 2 நாட்களும் சேர்த்து மொத்தம் 5 லட்சத்து 12 ஆயிரத்து 166 பேர் பயணம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது முதல் இதுவரையில் இதுவே அதிகபட்சமாக பயணிகள் பயணம் செய்துள்ளது என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது

Tags :