Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: vaithegi Thu, 16 Feb 2023 1:55:55 PM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுடெல்லி: புதியதாக 126 பேருக்கு கொரோனா .... இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. கடந்த சில வாரங்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு சற்றேறக்குறைய 100 என்ற அளவிலே பதிவாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 126 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 74 ஆக இருந்தது. நேற்று 102 ஆக அதிகரித்த நிலையில், இன்று புதிதாக 126 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது சற்று அதிகரித்துள்ளது. இதுவரை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 84 ஆயிரத்து 502 ஆக உயர்ந்துள்ளது.

corona,india ,கொரோனா ,இந்தியா

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 113 பேர் உள்பட இதுவரை மற்றும் 4 கோடியே 41 லட்சத்து 51 ஆயிரத்து 910 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து தற்போது 1,835 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று கொண்டு வருகிறார்கள்.

இதனை அடுத்து இது நேற்றை விட 12 அதிகமாகும். தொற்று பாதிப்பால் நேற்று கர்நாடகாவில் ஒருவர் இறந்துள்ளார். மொத்த பலி எண்ணிக்கை 5,30,757 ஆக உயர்ந்துள்ளது.

Tags :
|