Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 1,818 பேருக்கு கொரோனா உறுதி

கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 1,818 பேருக்கு கொரோனா உறுதி

By: vaithegi Thu, 01 Sept 2022 08:21:29 AM

கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 1,818 பேருக்கு கொரோனா  உறுதி

சீனா: உலகின் முதன் முதலில் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின் அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத மிக பெரிய தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது.

எனவே கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

corona,china ,கொரோனா  ,சீனா

இதை அடுத்து நேற்று முன்தினம் 1,829 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அந்த எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

எனவே அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 1,818 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,426 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி இருப்பது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக உள்ளது. மேலும் சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,43,081 ஆக உயர்ந்துள்ளது

Tags :
|