Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 71, 787 பேர் கொரோனாவால் பாதிப்பு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 71, 787 பேர் கொரோனாவால் பாதிப்பு

By: Nagaraj Sat, 11 July 2020 3:37:31 PM

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 71, 787 பேர் கொரோனாவால் பாதிப்பு

71 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு... அமெரிக்காவில் அசுரவேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், கடந்த 24 மணி நேரத்தில் 71,787 பேர் பாதிப்படைந்துள்ளதோடு 849 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகளவில் பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். இதற்கமைய அமெரிக்காவில் கொரோனா வைரசால் மொத்தமாக 32 இலட்சத்து 91 ஆயிரத்து 786பேர் பாதிப்டைந்துள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 36 ஆயிரத்து 671 பேர் உயிரிழந்துள்ளனர்.

america,same day,71 thousand people,corona,high impact ,அமெரிக்கா, ஒரே நாள், 71 ஆயிரம் பேர், கொரோனா, அதிக பாதிப்பு

மேலும் 16 இலட்சத்து 94 ஆயிரத்து 620 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 15 ஆயிரத்து 777 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர 14 இலட்சத்து 60 ஆயிரத்து 495 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால், அதிகம் பாதிக்கபட்ட மாநிலமாக நியூயோர்க் உள்ளது. அங்கு நான்கு இலட்சத்து 26ஆயிரத்து 16பேர் பாதிப்படைந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால், அதிக பாதிப்பையும், உயிரிழப்பையும் சந்தித்த நாடாக அமெரிக்காவே விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|