Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்துக்கு இவ்வளவு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது .. மத்திய அரசு தெரிவிப்பு

கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்துக்கு இவ்வளவு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது .. மத்திய அரசு தெரிவிப்பு

By: vaithegi Tue, 28 Mar 2023 10:50:59 AM

கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்துக்கு இவ்வளவு  ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது   ..  மத்திய அரசு தெரிவிப்பு

புதுடெல்லி: தமிழகத்துக்கு ரூ.34 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. இழப்பீடு .... கடந்த 3 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட ஜி.எஸ்.டி. இழப்பீடு விவரங்கள் பற்றி நாடாளுமன்ற மக்களவையில் வட மாநிலங்களைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள் கேள்வி கேட்டு இருந்தனர்.

அதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து இருந்தார். இதனை அடுத்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்திய கட்டுப்பாட்டாளர் மற்றும் பொது தணிக்கையாளரின் தணிக்கை புள்ளிவிவரங்கள் கிடைத்த பிறகே ஒவ்வொரு நிதி ஆண்டுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ள மந்திரி, கடந்த 3 ஆண்டுகளுக்கான இழப்பீடு விவரங்களை பட்டியலாக கொடுத்திருந்தார்.

gst,central govt ,ஜி.எஸ்.டி,மத்திய அரசு

எனவே இதன்படி 2020-2021, 2021-2022, 2022-2023 ஆகிய நிதியாண்டுகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.3 லட்சத்து 83 ஆயிரத்து 656 கோடி இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து இதில் தமிழ்நாட்டுக்கு முறையே ரூ.11,142 கோடி, ரூ.6697 கோடி, ரூ.16,215 கோடி என மொத்தம் ரூ.34,054 கோடி வழங்கப்பட்டு உள்ளது. புதுச்சேரிக்கு ரூ.607 கோடி, ரூ.329 கோடி, ரூ.723 கோடி, ரூ.1,659 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது என ஆதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|