Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த 7 நாட்களில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு

கடந்த 7 நாட்களில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு

By: vaithegi Wed, 04 Jan 2023 2:52:16 PM

கடந்த 7 நாட்களில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு

இந்தியா: தற்போது சர்வதேச அளவில் கொரோனாவின் பாதிப்பு உயர்ந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதில் கடந்த 7 நாட்களில் மட்டும் சீனாவில் 37,149 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதே போன்று ரஷ்யாவில் 37,804 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த 7 நாட்களில், உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 29,50,720 ஆக உள்ளது.அத்துடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,535 ஆக உயர்ந்துள்ளது.

number,corona,world ,எண்ணிக்கை ,கொரோனா,உலகம்

இதனையடுத்து, இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தியாவில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,582 ஆக உள்ளதாகவும், அதன்படி தொற்று விகிதம் 0.09% ஆக பதிவாகியுள்ளது.

மேலும் இதே போன்று தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,41,45,667 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி குணமடையும் விகிதம் 98.8% ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் 45,769 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக இதுவரை 220.11 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நேற்று ஒரே நாளில் 1.51 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags :
|
|