Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்பே மறுபடியும் ஆட்சி அமைப்பார் என கருத்துகணிப்பு

அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்பே மறுபடியும் ஆட்சி அமைப்பார் என கருத்துகணிப்பு

By: Karunakaran Mon, 27 July 2020 1:18:36 PM

அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்பே மறுபடியும் ஆட்சி அமைப்பார் என கருத்துகணிப்பு

அமெரிக்காவில் நவம்பர் 3 ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. கொரோனாவுக்கு மத்தியில் அங்கு நிச்சயம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என பல்வேறு கருத்துகணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் வேலையிழப்பு போன்றவை ஏற்பட்டுள்ளதால் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பின் தங்கியுள்ளார். இருப்பினும் தற்போது நடந்த கருத்துகணிப்பு முடிவில், எதிர்வரும் நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க மக்கள் தங்களின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள் அல்லது தற்போதைய ஜனாதிபதிக்கே இன்னொரு வாய்ப்பை வழங்குவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

president trump,america,rule again,election ,அதிபர் டிரம்ப், அமெரிக்கா, மீண்டும் ஆட்சி, தேர்தல்

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் நூறு நாட்களே உள்ள நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்துக் கணிப்புகளில் மோசமான நிலையில் உள்ளார். ஆனால் அவை அனைத்தையும் மீறி அவர் வெற்றி பெறுவார் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

புளோரிடா, அரிசோனா மற்றும் மிச்சிகன் ஆகிய மூன்று சவால் மிகுந்த மாகாணங்களில் பிடென் முந்தியிருப்பதாக சிஎன்என் ஞாயிற்றுக்கிழமை ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் டிரம்ப் இந்த மூன்று மாகாணங்களையும் 2016 ல் வென்றிருந்தார். தேசிய அளவில் முன்னெடுக்கப்படும் கருத்துக்கணிப்புகளில், டிரம்ப் பல வாரங்களாக ஜோ பிடெனுக்குப் பின்னால் இருப்பினும், மாகாண அளவில் தேர்வு செய்யப்படும் அந்த 270 உறுப்பினர்களே ஜனாதிபதி யார் என்பதை முடிவு செய்வார்கள்.

Tags :