Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.16 லட்சத்தைத் தாண்டியது

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.16 லட்சத்தைத் தாண்டியது

By: Karunakaran Fri, 12 June 2020 10:59:35 AM

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.16 லட்சத்தைத் தாண்டியது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் உள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 75 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இதுவரை 4.23 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனா பாதிப்பில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. தற்போது அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.16 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தற்போது அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.

united states,coronavirus,corona death,brazil ,அமெரிக்கா,கொரோனா,பிரேசில்,கொரோனா பாதிப்பு

அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 16 ஆயிரத்தைத் தாண்டியது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில் உள்ளது. பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.

Tags :