Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேனியில் இந்த தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனியில் இந்த தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

By: vaithegi Wed, 15 Feb 2023 9:08:12 PM

தேனியில் இந்த தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி: தேனி ஆட்சியர் ஷஜீவனா அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 17.02.2023 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

இதையடுத்து தேனி மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரத்திலுள்ள வேளாண்மை மற்றும் இதர துறைகள் சம்பந்தமான திட்டங்கள் மற்றும் குறைகளை விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு தெரிவித்து பயன்பெறலாம். மேலும், தங்களது குறைகளை மனுக்களாக குறைதீர் கூட்டத்தில் வழங்கலாம்.

grievances,farmers ,குறைதீர்க்கும் ,விவசாயிகள்

இதனை அடுத்து விவசாயிகளிடம் பெறப்படும் மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அலுவலர்கள் கண்காணித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மனுக்களை அனுப்பி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எனவே, நடைபெற உள்ள விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தெரிவித்து பயன்பெற வேண்டும், என ஆட்சியர் ஷஜீவனா தகவல் தெரிவித்துள்ளார்.

Tags :