Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருமானூரில் சீறி பாய்ந்த காளைகள்... அடக்கிய வாலிபர்கள்

திருமானூரில் சீறி பாய்ந்த காளைகள்... அடக்கிய வாலிபர்கள்

By: Nagaraj Sat, 11 Mar 2023 6:57:57 PM

திருமானூரில் சீறி பாய்ந்த காளைகள்... அடக்கிய வாலிபர்கள்

அரியலூர்: ஜல்லிக்கட்டு போட்டி... மாசி மகத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் திருமானூரில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது.

மாசி மகத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் அரியலூர் மாவட்டம் திருமானூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியை மாநில போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு அரியலூர் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாகும்.

இதில், எம்.எல்.ஏ., சின்னப்பா, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர். மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட 300 காளைகளும், 200 மாடுபிடி வீரர்களும் போட்டியில் அனுமதிக்கப்பட்டனர்.

celebration,jallikattu,temple, ,ஜல்லிக்கட்டு போட்டி, போலீசார், மாசி மகம், பாதுகாப்பு

சீறிப்பாய்ந்த வாடிவாசல் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு ரொக்கமும் பரிசுகளும் வழங்கப்பட்டன. இதேபோல் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு விழாக்குழுவினர் ரொக்கம் மற்றும் பரிசுகள் வழங்கினர்.

இப்போட்டியில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்றன. ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கண்டுகளித்தனர். அரியலூர் டிஎஸ்பி சங்கர் கணேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags :
|