Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சமூக இடைவெளியுடன் கூடிய பேருந்து இருக்கைகள்; ஆந்திரா அசத்தியது

சமூக இடைவெளியுடன் கூடிய பேருந்து இருக்கைகள்; ஆந்திரா அசத்தியது

By: Nagaraj Tue, 12 May 2020 2:54:09 PM

சமூக இடைவெளியுடன் கூடிய பேருந்து இருக்கைகள்; ஆந்திரா அசத்தியது

அசத்தலாக செய்து காண்பித்துள்ள ஆந்திரா மாநிலம்... ஆந்திரா மாநில போக்குவரத்துக் கழகம் சார்பில், சமூக இடைவெளியுடன் கூடிய இருக்கைகள் கொண்ட பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவலின் முக்கிய தடுப்பு நடவடிக்கையான சமூக இடைவெளியை பின்பற்ற தொடர்ந்து அறிவுறுத்தப்படுகின்றனர். இந்நிலையில், பொதுப்போக்குவரத்தை சமூக இடைவெளியுடன் நடைமுறைப்படுத்த மாநில அரசுகள் தயாராகி வருகின்றன.

cleaning,social space,bus,ap,traffic ,சுத்தம், சமூக இடைவெளி, பஸ், ஆந்திரா, போக்குவரத்து

அதற்கு ஏற்றார்போல, ஆந்திர போக்குவரத்துக் கழகம் வழக்கமாக பேருந்துகளில் இருக்கக்கூடிய இருக்கைகளின் வடிவமைப்பை முற்றிலும் மாற்றி மூன்று வரிசைகள் கொண்ட இருக்கையாக மாற்றியுள்ளது.

இதன்மூலம் ஒரு நபருக்கும் இன்னொருவருக்கும் ஒரு மீட்டர் இடைவெளி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக ஆந்திரப் பிரதேசம் மாநிலம் முழுவதும் பயணிக்கக்கூடிய தொலைதூரப் பேருந்துகளுக்கு முதற்கட்டமாக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.


cleaning,social space,bus,ap,traffic ,சுத்தம், சமூக இடைவெளி, பஸ், ஆந்திரா, போக்குவரத்து

விரைவில் போக்குவரத்து துவங்க வேண்டும் என்ற காரணத்திற்காக இதுபோன்ற ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும், சகஜமான நிலை வந்த பிறகு இருக்கைகள் பழைய முறையைப்போல மாற்றவும் முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், பேருந்துகள் முறையாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யவும், இருக்கைகள், கைப்பிடிகள் உள்ளிட்டவை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்யவும் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags :
|
|