Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இதில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல .. பள்ளிக்கல்வித்துறை திட்டமிடல்

இதில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல .. பள்ளிக்கல்வித்துறை திட்டமிடல்

By: vaithegi Fri, 10 Feb 2023 4:12:23 PM

இதில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல   ..   பள்ளிக்கல்வித்துறை திட்டமிடல்

சென்னை: மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்ல பள்ளிக்கல்வித்துறை திட்டமிடல் .... தமிழக அரசு பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் அவ்வப்போது போட்டிகள் நடத்தப்பட்டு கொண்டு வருகிறது. கடந்த வருடம் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதையடுத்து இத்தகைய போட்டிகள் மாணவர்களிடையே கல்வி சார்ந்த இணை செயல்பாடுகளை மேற்கொள்ள ஊக்குவிக்கிறது.அதைத் தொடர்ந்து தற்போது அரசு பள்ளிகளில் வானவியல் மன்றம், இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம், சிறார் திரைப்படம் உள்ளிட்ட போட்டிகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

department of education,tourism ,பள்ளிக்கல்வித்துறை ,சுற்றுலா

இப்போட்டிகள் பிப்ரவரி 13- ம் தேதி முதல் வட்டார மற்றும் மாவட்ட, மாநில அளவில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்கலாம்.இதில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து நடத்தப்படவுள்ள போட்டிகளில் அனைத்து மாணவர்களும் பங்கேற்கும் வகையில் இருக்க வேண்டும். மேலும் போட்டிகளில் அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பினை வழங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


Tags :