Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மேலும் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மேலும் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Fri, 17 July 2020 12:00:53 PM

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மேலும் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே 1,926 பேருக்கு நோய் தொற்று உறுதியாகி உள்ள நிலையில் இன்று மேலும் 80 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 லட்சத்து 7 ஆயிரத்து 416 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 2,236 பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

villupuram district,corona virus,infection,death,treatment ,விழுப்புரம் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே 1,926 பேருக்கு நோய் தொற்று உறுதியாகி உள்ள நிலையில் இன்று காலை நிலவரப்படி மேலும் 80 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,006-ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 1,034 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க மாவட்டம் முழுவதும் பல்வேறு தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Tags :
|