Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரபல நடிகையுடன் தகாத உறவு… முன்னாள் அதிபர் டிரம்ப் கைது ஆக வாய்ப்பாம்

பிரபல நடிகையுடன் தகாத உறவு… முன்னாள் அதிபர் டிரம்ப் கைது ஆக வாய்ப்பாம்

By: Nagaraj Mon, 20 Mar 2023 8:36:23 PM

பிரபல நடிகையுடன் தகாத உறவு… முன்னாள் அதிபர் டிரம்ப் கைது ஆக வாய்ப்பாம்

வாஷிங்டன்: முன்னாள் அதிபர் கைதாவாரா?... பிரபல நடிகையுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதும், அவர் மீது பல குற்றச்சாட்டுகள் அடுக்கி வருவதும் தெரிந்ததே.

affair,america,arrest, ,கைது, டொனால்ட் டிரம்ப், தகாத உறவு

இந்நிலையில் அவர் நடிகை ஸ்டோர்மி டேனியலுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த புகார் தொடர்பாக அமெரிக்க போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்றும், கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கூறும்போது, விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசத்தை காப்பாற்ற தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|
|