Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாராளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் இந்திய தேசிய சின்னம் திறப்பு

பாராளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் இந்திய தேசிய சின்னம் திறப்பு

By: Nagaraj Mon, 11 July 2022 10:15:30 PM

பாராளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் இந்திய தேசிய சின்னம் திறப்பு

புதுடில்லி: பிரதமர் திறந்து வைத்தார்... புதிதாக கட்டப்பட்டு வரும் பாராளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரை முகப்பில், வெண்கலத்தால் ஆன இந்திய தேசிய சின்னத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

சென்ட்ரல் விஸ்டா என்ற திட்டத்தின் கீழ் ரூ. 971 கோடியில் புதிய பாராளுமன்ற கட்டடம் கட்டப்பட்பட்டு வருகிறது. புதிய பாராளுமன்ற கட்டிடம், வரும் காலத்தில் இரு சபைகளையும் விரிவாக்கம் செய்ய வசதியாக லோக்சபாவிற்கு 888 உறுப்பினர்களும், ராஜ்யசபாவிற்கு 384 உறுப்பினர்களும் அமரத்தக்க வகையில் கட்டப்படுகிறது.

prime minister,union minister,staff,national emblem,lion face ,பிரதமர், மத்திய அமைச்சர், பணியாளர்கள், தேசிய சின்னம், சிங்க முகம்

புதிய கட்டிடத்தில், பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் 1,224 உறுப்பினர்கள் பங்கேற்க முடியும். கட்டடப்பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இந்நிலையில் புதிய பாராளுமன்ற கட்டடத்தின் மேற்கூரை முகப்பி்ல் சிங்க முகம் கொண்ட நமது இந்திய தேசிய சின்னம் 6.5 மீட்டர் உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சின்னத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இதில் சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் பின் புதிய பாராளுமன்ற கட்டுமான பணியில் ஈடுபட்டு உள்ள பணியாளர்களுடன் சிறிது நேரம் பிரதமர் மோடி உரையாடினார்.

Tags :
|