Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின் நுகர்வை குறைக்கும் முயற்சியில் ஆடைகள் அணிவதில் கவனம் செலுத்த வலியுறுத்தல்

மின் நுகர்வை குறைக்கும் முயற்சியில் ஆடைகள் அணிவதில் கவனம் செலுத்த வலியுறுத்தல்

By: Nagaraj Mon, 10 Oct 2022 08:52:23 AM

மின் நுகர்வை குறைக்கும் முயற்சியில் ஆடைகள் அணிவதில் கவனம் செலுத்த வலியுறுத்தல்

பிரான்ஸ்: ஆடைகள் அணிவதில் கவனம் தேவை... பிரான்ஸில் அனைத்து மக்களும் தங்கள் மின்சார நுகர்வு குறைக்க முயற்சிக்கும் ஆடைகள் அணிவதில் கவனம் செலுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது.


ஐரோப்பாவில் குளிர்காலம் நெருங்கி வரும்போது, மின்சார தடை மற்றும் அதிக கட்டண அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்களை குளிருக்கு தகுந்த ஆடைகளை அணிந்துக் கொள்ளுமாறு பொருளாதார அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். தனது அமைச்சில் பணியாற்றுபவர்களிடம் கழுத்தை மூடிய ஆடைகளை அணியுமாறு தான் கேட்டுள்ளதாக அமைச்சர் புருனோ லு மைரே(Bruno Le Maire) தெரிவித்துள்ளர்.

அவ்வாறான ஆடைகள் அணியும் போது குளிரின் தாக்கம் குறைவடைந்து சூடாக்குவதனை குறைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 19 பாகை செல்சியஸிற்கு கீழே குறையும் வரை நாங்கள் அமைச்சகத்தில் வெப்பமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

electricity,saving clothes,bills,heads of state,people ,
மின்சாரம், சேமிக்கும் ஆடைகள், கட்டணம், அரச தலைவர்கள், மக்கள்

இனிமேல் தன்னையும் ஆடை அணிந்து காண முடியாதெனவும் கழுத்து மூடிய ஆடைகளுடனேயே அவதானிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது ஒரு சிறந்த விடயமாக இருக்கும் எனவும் அது எரிசக்தியை சேமிக்க உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவ்வாறான ஆடை அணிந்து அலுவலகத்திற்கு செல்லும் புகைப்படம் ஒன்றையும் அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதேவேளை, எரிசக்தியை சேமிக்க உதவும் ஆடைகள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் கழுத்தை மூடிய உடையுடன் உரையாற்றியுள்ளார்.

இதேவேளை, பிரதமரையும் ஜெக்கட் அணிந்து, கழுத்தை மறைக்கும் சட்டை அணிந்து கூட்டங்களில் கலந்து கொள்வதனை இந்த நாட்களில் அவர் நடைமுறைப்படுத்தி வருகின்றார். மின்சக்தியை ஆடைகள் ஊடாகவும் சேமிக்க முடியும் என்பதனை மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையிலேயே இவ்வாறு அரச தலைவர்கள் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதனை அவதானிக்கும் மக்களும் மின்சாரத்தை சேமிக்கும் ஆடைகளை அணிவார்கள் எனவும் அதிக மின் கட்டணத்தையும், மின் தடையையும் தவிர்க்க முயற்சிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags :
|