Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எ.வ.வேலு தொடர்பு இடங்களில் 4-வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை

எ.வ.வேலு தொடர்பு இடங்களில் 4-வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை

By: vaithegi Mon, 06 Nov 2023 09:50:32 AM

எ.வ.வேலு தொடர்பு இடங்களில் 4-வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை


சென்னை: அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதையடுத்து திருவண்ணாமலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற நிலையில் சென்னை உள்ளிட்ட 40 இடங்களிலும் சோதனை நடப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் வேலு மற்றும் அவருடைய மகன் கம்பன், குமரன் ஆகியோர் தொடர்புடைய இடங்களிலும் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடைபெற்றது. மேலும் கோவையில் அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினரான மீனா ஜெயக்குமார் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

income tax audit,e.v. velu ,வருமான வரி சோதனை,எ.வ.வேலு

இந்த நிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4-வது நாளாக ஐ.டி.சோதனை நடைபெற்று கொண்டு வருகிறது.

சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் சோதனை; வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு செய்த புகாரிலும் சோதனை நடைபெற்று கொண்டு வருகிறது.

Tags :