Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரூ.113 கோடி வரி செலுத்த கூறி நோட்டீஸ் அனுப்பி அதிர்ச்சி கொடுத்த வருமான வரித்துறை

ரூ.113 கோடி வரி செலுத்த கூறி நோட்டீஸ் அனுப்பி அதிர்ச்சி கொடுத்த வருமான வரித்துறை

By: Nagaraj Sat, 08 Apr 2023 10:56:05 AM

ரூ.113 கோடி வரி செலுத்த கூறி நோட்டீஸ் அனுப்பி அதிர்ச்சி கொடுத்த வருமான வரித்துறை

மத்திய பிரதேசம்: அதிர்ச்சியை ஏற்படுத்திய வருமானவரித்துறை... மத்திய பிரதேசத்தில், 53 ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளம் பெறும் ஒருவருக்கு 113 கோடி ரூபாய் வரி செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிண்டு நகரைச் சேர்ந்த ரவி குப்தா மாதம் ஐம்பத்து மூன்றாயிரம் மட்டுமே சம்பளம் வாங்கும் நிலையில், அவருக்கு 113 கோடி ரூபாய் வரி ஏய்ப்புக்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

income,company,penalty notice,salary,tax department ,வருமானம், நிறுவனம், அபராத நோட்டீஸ், சம்பளம், வரித்துறை

கடந்த 2011-12ம் ஆண்டில் அவரது கணக்கில் மேற் கொள்ளப்பட்டிருந்த 132 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனைக்காக இந்த தொகையை செலுத்தும்படி கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2019 ம் ஆண்டிலும் குப்தாவுக்கு மூன்றரை கோடி ரூபாய்க்கான அபராத நோட்டீஸ் வருமான வரித் துறையால் வழங்கப்பட்டது. அப்போது, அவர் ஒரு BPO நிறுவனத்தில் மாதம் 7,000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது

Tags :
|
|