Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரபல கட்டுமான நிறுவனதில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

பிரபல கட்டுமான நிறுவனதில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

By: Monisha Tue, 15 Dec 2020 2:45:51 PM

பிரபல கட்டுமான நிறுவனதில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

பிரபல கட்டுமான நிறுவனம் ஸ்ரீபதி அசோசியேட்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் உள்பட பல்வேறு அரசு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், ரியல் எஸ்டேட் , மசாலா தயாரித்தல் போந்த தொழில்களும் நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஸ்ரீபதி அசோசியேட்ஸ் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான 25 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை ஈரோடு தங்கபெருமாள் வீதியில் உள்ள கட்டுமான நிறுவன அலுவலகத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 30 பேர் கொண்ட குழுவினர் அதிரடியாக நுழைந்தனர்.

அலுவலகத்தின் கதவை அடைத்து விட்டு உள்ளே சென்ற அதிகாரிகள் அங்குள்ள பணியாளர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. மேலும், அவர்களிடம் இருந்த செல்போன்களை வாங்கி கொண்ட அதிகாரிகள் அங்குள்ள தொலைபேசியை பயன்படுத்தவும் தடை விதித்தனர். இதைத்தொடர்ந்து அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகளை வாங்கி சரிபார்க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட தொடங்கினார்கள்.

construction company,income tax department,complaint,inspection,document ,கட்டுமான நிறுவனம்,வருமான வரித்துறை,புகார்,சோதனை,ஆவணம்

இதேபோல் ஈரோடு அருகே கஸ்பாபேட்டையில் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து வீடு முழுவதும் சோதனை செய்தனர். வருமானத்துக்கு ஏற்ப உரிய வரி செலுத்தப்பட்டுள்ளதா என்று அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தினார்கள். இந்த சோதனை நள்ளிரவு தாண்டியும் தொடர்ந்தது. முதல் நாள் சோதனையில் கணக்கில் வராத பணம் சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இன்று இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினரின் சோதனை நீடித்து வருகிறது. காளைமாடு சிலை அருகே உள்ள கட்டுமான நிறுவன அலுவலகம் வெளிப்புறமாக பூட்டப்பட்டுள்ளது. உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் கஸ்பா பேட்டை பகுதியில் உள்ள உரிமையாளர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனை முடிவில் தான் எவ்வளவு பணம், ஆவணம் கைப்பற்றப்பட்டுள்ளது போன்ற விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :