Advertisement

பெங்களூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

By: Nagaraj Sat, 10 Dec 2022 10:03:38 PM

பெங்களூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

பெங்களூரு: பெங்களூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து பெங்களூரு உள்ளிட்ட 3 மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்களின் அலுவலகங்கள், உரிமையாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.


இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பெங்களூருவில் வருமான வரி சரியாக செலுத்தாமல், வரி ஏய்ப்பு செய்து வரும் நிறுவனங்கள் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், பெங்களூரு, ராம்நகரில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் முறையாக வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளது.

இதையடுத்து, அந்த கார்ப்பரேட் நிறுவனங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

bangalore,incom tax,raid, ,சோதனை, பெங்களூரு, வருமான வரித்துறையினர்

இந்த நிலையில், பெங்களூரு சஞ்சய்நகர், ஹெப்பால், கொடிகேஹள்ளி, ராம்நகர், பிடதி, சிக்பள்ளாப்பூரில் உள்ள தனியார் நிறுவனங்கள், அந்த நிறுவன உரிமையாளர்களின் வீடுகள் என 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


சோதனையின் போது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்து மோசடி செய்திருப்பதுடன், போலியான பெயரில் நிறுவனத்தை தொடங்கி பண பரிமாற்றம் செய்ததை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த நிறுவனங்களில் இருந்து வரி வசூல் செய்ததற்கான, வங்கி ஆவணங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது.


அந்த ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்,

Tags :
|