Advertisement

இரண்டாம் நாளாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

By: Nagaraj Sun, 28 May 2023 09:45:23 AM

இரண்டாம் நாளாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

கோவை: 2ம் நாளாகவும் சோதனை... அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் உள்ளிட்டோர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2ஆம் நாளாக சோதனை நடத்தினர்.

கோவையில் அமைச்சரின் ஆதரவாளரும், ரியல் எஸ்டேட் அதிபருமான செந்தில் கார்த்திகேயன் வீட்டில் 2வது நாளாக சோதனை நடைபெறுகிறது. பொள்ளாச்சி அருகே அமைச்சரின் நண்பர் அரவிந்த் என்பவரது பண்ணை வீடு மற்றும் பனப்பட்டி பகுதியில் சங்கர் ஆனந்த் என்பவரது கல் குவாரியிலும் அதிகாரிகள் சோதனையை தொடர்ந்தனர்.

officers,prosecution,documents,gang,trial,accusation ,அதிகாரிகள், தரப்பு, ஆவணங்கள், கும்பல், சோதனை, குற்றச்சாட்டு

இதனிடையே, கரூரில் சோதனையிடச் சென்ற அதிகாரிகள் மீது தாக்கப்பட்ட சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது என வருமானவரித் துறை தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கும்பலாக தாக்கிவிட்டு, ரொக்கம், ஆவணங்களை பறித்துச் செல்லுமாறு செல்வராஜ் என்பவருக்கு சுப்ரமணி என்பவருக்கு உத்தரவிட்டதற்கான ஆடியோ உள்ளதாகவும், அதனை போலீசாரிடம் சமர்பிக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|