Advertisement

சென்னையில் காற்றுமாசு உயர்வு

By: vaithegi Sat, 11 Nov 2023 09:34:24 AM

சென்னையில் காற்றுமாசு உயர்வு

சென்னை: சென்னையில் பல இடங்களில் காற்றின் தரக்குறியீடு 10 முதல் 20 வரை பதிவாகிவுள்ளது. அந்த ஆகியில் பெருங்குடியில் 169, அரும்பாக்கம் 134, கொடுங்கையூர் 12, மணலி 109, ராயபுரம் 121, கும்மிடிப்பூண்டி 230, வேலூரில் 123, கடலூரில் 112 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகியுள்ளது. காற்று மாசு காரணமாக சுவாச பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

101-200 என்ற அளவு மிதமான காற்று மாசு என வகைப்படுத்தப்பட்டு உள்ளது. 101-200 என்ற மிதமான காற்று மாசுவினால் ஆஸ்துமா ஆகிய பாதிப்பு உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தலாம். 201-300 என்ற அளவிலான மோசமான காற்று மாசுவினால் நீண்டநேரம் வெளியில் உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல், இதயநோய் உள்ளவர்களுக்கு அசெளகரியம் ஏற்படலாம்.

air pollution,chennai ,காற்றுமாசு ,சென்னை

இதையடுத்து கொரோனா கால கட்டத்தில் கட்டுபாட்டிலிருந்த காற்று மாசு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. டெல்லி அரசு முறையாக கட்டுப்பாடுகளை விதித்து காற்றுமாசை குறைக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி காற்று மாசு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளாகவே டெல்லியில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க தடை நீடித்து கொண்டு வருகிறது.பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் கழிவுகளை விவசாயிகள் தீ வைத்து எரிப்பதால் எழும் புகைமூட்டம் டெல்லி முழுவதும் பரவியிருக்கிறது.

Tags :