Advertisement

இந்தியாவில் கார் விற்பனை அதிகரிப்பு

By: vaithegi Fri, 14 Apr 2023 12:44:24 PM

இந்தியாவில் கார் விற்பனை அதிகரிப்பு

இந்தியா: இந்தியாவில் 2022-23 ஆம் நிதி ஆண்டில் கார் விற்பனை 27 சதவீதம் அதிகரித்துள்ளது. கார்களின் மொத்த விற்பனை தொடர்பான விவரங்களை இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ளது.

எனவே அதன்படி, 2022-23 நிதி ஆண்டில் 39 லட்சம் கார்கள் டீலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2021-22 நிதி ஆண்டை விட 27 சதவீதம் அதிகம். அந்த நிதியாண்டில் 31 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன.

car,india ,கார் ,இந்தியா

செமிகண்டக்டர் தட்டுப்பாடு குறைந்திருப்பதாலும் எஸ்யூவி வாகனங்களுக்கான தேவை அதிகரித்திருப்பதாலும் கார்களின் விற்பனை உயர்ந்து இருப்பதாக சியாம் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

இதையடுத்து மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் கார் விற்பனை சென்ற நிதி ஆண்டில் உச்சம் தொட்டுள்ளது. மேலும் மாருதி சுசூகி நிறுவனத்தின் கார் விற்பனை 2022-23 நிதி ஆண்டில் 19,66,164 ஆகவுள்ளது. இது 2021-22 நிதி ஆண்டு விற்பனையைவிட 19 சதவீதம் அதிகம்.

Tags :
|