Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள் மீண்டும் அதிகரிப்பு

சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள் மீண்டும் அதிகரிப்பு

By: Monisha Tue, 06 Oct 2020 4:32:38 PM

சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள் மீண்டும் அதிகரிப்பு

சென்னையில் கடந்த 2 வாரமாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1300-ஐ தாண்டி உள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அம்பத்தூர், கோடம்பாக்கத்தில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

கடந்த மாதம் முன் பகுதியில் தொற்று குறைந்த வந்த நிலையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் முற்றிலும் அகற்றப்பட்டன. ஆனால் கடந்த மாத இறுதியில் இருந்து தொற்று அதிகரிக்க தொடங்கியது. இதனால் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 4-ந் தேதி 10 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதிகள் இருந்த நிலையில் நேற்று இது 36 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 26 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர் மண்டலத்தில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் அங்கு மட்டும் 16 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

chennai,corona virus,control areas,streets,outbreak ,சென்னை,கொரோனா வைரஸ்,கட்டுப்பாட்டு பகுதிகள்,தெருக்கள்,தொற்று பரவல்

அம்பத்தூர், லெனில் நகர், நியூ அண்ணாநகர், சோழபுரம் 6-வது ரோடு, தென்றல் நகர், கொரட்டூர் வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு, ஸ்டேசன் ரோடு, அத்திப்பட்டு, பாடி, அண்ணாநகர், டி.வி.எஸ். அவின்யூ, முகப்பேர் மேற்கு 3-வது பிளாக், முகப்பேர் கிழக்கு வள்ளலார் நகர், முகப்பேர் கோல்டன் ஜார்ஜ் சர்ச்ரோடு உள்ளிட்ட தெருக்களில் தொற்று அதிகமாக பரவி உள்ளது.

இதேபோல பெருங்குடி, அடையார் மண்டலங்களில் தலா 4 தெருக்களும், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர் பகுதிகளில் தலா 3 தெருக்களும் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன.

Tags :