Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கனடாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு; இதுவரை 4.75 லட்சம் பேர் பாதிப்பு

கனடாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு; இதுவரை 4.75 லட்சம் பேர் பாதிப்பு

By: Nagaraj Wed, 16 Dec 2020 3:56:20 PM

கனடாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு; இதுவரை 4.75 லட்சம் பேர் பாதிப்பு

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு... கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 4 இலட்சத்து 75 ஆயிரத்து 214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 06 ஆயிரத்து 352 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 106 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 13 ஆயிரத்து 659 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

december,corona,vulnerability increase,canada ,டிசம்பர், கொரோனா, பாதிப்பு அதிகரிப்பு, கனடா

அமெரிக்காவின் ஃபைஸர், ஜேர்மனியின் பயோஎன்டெக் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசிக்கு கனடா சுகாதார ஒழுங்காற்று அமைப்பு அண்மையில் அனுமதி அளித்தது. இந்தத் தடுப்பூசிகள் நாடு முழுவதும் உள்ள 14 விநியோக மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஃபைஸர்- பயோஎன்டெக் நிறுவனங்களுடன் கனடா அரசாங்கம், மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தில் அண்மையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதால் டிசம்பர் இறுதிக்குள் 2 லட்சத்து 49 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும்.

இதுதவிர 6 மருந்து நிறுவனங்களுடன் கனடா அரசாங்கம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. தற்போது, மேலும் மூன்று தடுப்பூசிகளைப் பரிசீலித்து வருவதாகவும், இதில் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு சுகாதாரத் துறையினர் விரைவில் அனுமதி அளிக்க உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனடா மக்களுக்குத் தேவையான தடுப்பூசிகளைவிட கூடுதலாகப் பெற திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதலாக கொள்முதல் செய்யும் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு அன்பளிப்பாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|