Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனா பாதித்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா பாதித்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

By: Nagaraj Sun, 21 June 2020 10:03:17 PM

இந்தியாவில் கொரோனா பாதித்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

குணமடைவோர் எண்ணிக்கை உயர்வு... இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 55.49 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக பரவி வருகிறது. தினமும் 13,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

department of health,corona,examination,healers ,சுகாதாரத் துறை, கொரோனா, பரிசோதனை, குணமடைவோர்

கடந்த 24 மணி நேரத்தில் 13,925 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் 2,27,755 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 55.49 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் நடத்தப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,90,730 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|