Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஓணம் பண்டிகையை ஒட்டி தேவை அதிகரிப்பு... விலை உயர்ந்தது நேந்திரம் பழம்

ஓணம் பண்டிகையை ஒட்டி தேவை அதிகரிப்பு... விலை உயர்ந்தது நேந்திரம் பழம்

By: Nagaraj Wed, 07 Sept 2022 08:19:03 AM

ஓணம் பண்டிகையை ஒட்டி தேவை அதிகரிப்பு... விலை உயர்ந்தது நேந்திரம் பழம்

சத்தியமங்கலம்: நேந்திரம் விலை உயர்ந்தது... ஓணம் பண்டிகையை முன்னிட்டு, நேந்திரம் வாழை தேவை அதிகரித்துள்ளதால் சத்தியமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் நேந்திரம் கிலோ ரூ.48க்கு ஏலம் போனது

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் சத்தியமங்கலம், கெம்பநாயக்கன் பாளையம், டி.ஜி.புதூா், சிக்கரசம்பாளையம், புதுவடவள்ளி, அரசூா், உக்கரம், செண்பகபுதூா், பெரியூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழைத்தாா்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

nendram,price rise,auction,sale,officials,onam festival ,நேந்திரம், விலை உயர்வு, ஏலம், விற்பனை, அதிகாரிகள், ஓணம் பண்டிகை

கேரளத்தில் ஓணம் பண்டிகைக்கு நேந்திரம் வாழை அதிகளவில் தேவைப்படுவதால் நேந்திரம் வாழைக்கு கடும் போட்டி நிலவியது. வாழை வரத்து குறைவாக இருந்ததால் நேந்திரம் விலை கிலோ ரூ.40 இல் இருந்து ரூ.48 வரை விற்பனையானது.

மற்ற வாழைகளின் விலை: பூவன் ரக வாழைத்தாா் ரூ.250 முதல் ரூ.900க்கும், தேன் வாழை ரூ.600க்கும், செவ்வாழை 650க்கும், மொந்தன் ரூ.250க்கும் விற்பனையானது. 2 ஆயிரம் வாழைத்தாா்கள் ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கு விற்பனையாயின என்று விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

Tags :
|