Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை உயர்வு

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை உயர்வு

By: Nagaraj Sat, 22 July 2023 7:09:13 PM

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை உயர்வு

சென்னை: கல்வி உதவித் தொகை உயர்வு... மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களின் கல்வி உதவித்தொகையை இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பல்வேறு நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு 2013-2014-ஆம் நிதியாண்டு முதல் அவர்களின் கல்வியினை மேம்படுத்தும் வகையில் 1-ஆம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் வகுப்பிற்கு ஏற்றவாறு கல்வி உதவித்தொகை குறைந்தபட்சம் ரூ.1000/- முதல் ரூ.7000/- வரை வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் 2023-2024-ஆம் நிதியாண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மானியக் கோரிக்கையின்போது முதலமைச்சர் “மாற்றுத்திறன் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும்” என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

disabled persons,education,allowance,govt.,raised ,மாற்றுத்திறனாளிகள், கல்வி, உதவித் தொகை, அரசு, உயர்த்தியது

இதை செயல்படுத்தும் விதமாக தற்போதுவழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையினை இருமடங்காக உயர்த்தி, 1-முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1,000/-என்பதனை ரூ.2,000/- ஆகவும், 6-ஆம் முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.3,000/- என்பதனை ரூ.6,000/- ஆகவும், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு ரூ.4000/-என்பதனை ரூ.8000/- ஆகவும், இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு ரூ.6,000/- என்பதனை ரூ.12,000/- ஆகவும், முதுகலை பட்டம் மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு ரூ.7,000/- என்பதனை ரூ.14,000/- ஆகவும் வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இதனால் சிறப்புக்கல்வி பெறும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி நிலையினை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் இவ்வுதவித்தொகையினை பெறுவதற்கு பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இவ்விண்ணப்பங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மூலம் பரிசீலனை செய்யப்பட்டபின் கல்வி உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.

Tags :
|