Advertisement

ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் மின்நுகர்வு அதிகரிப்பு

By: Nagaraj Sun, 18 Oct 2020 8:23:26 PM

ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் மின்நுகர்வு அதிகரிப்பு

ஊரங்கில் தளர்வு அளிக்கப்பட்ட பின்னர் மின் நுகர்வு அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாத முதல் பாதியில் இந்தியாவில் மின் நுகர்வு 11 புள்ளி நான்கு ஐந்து சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு, இந்தியாவில் மின் நுகர்வு கணிசமாக குறைந்தது.

report,power consumption,october,massive increase ,அறிக்கை, மின் நுகர்வு, அக்டோபர், பெருமளவு அதிகரிப்பு

தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் வணிக மற்றும் தொழில் நிறுவனங்கள் இயங்கத்தொடங்கிய நிலையில் மின் பயன்பாடு பெருமளவு அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் பாதியில் 49 புள்ளி ஆறு ஏழு பில்லியன் யூனிட்களாக இருந்த மின் நுகர்வு, தற்போது 55 புள்ளி மூன்று ஏழு பில்லியன் யூனிட்டுகளாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|