Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேட்டூர் அணை.. உபரி நீர் திறப்பின அளவு 1,00,000 லிருந்து 1,05,000 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணை.. உபரி நீர் திறப்பின அளவு 1,00,000 லிருந்து 1,05,000 கன அடியாக அதிகரிப்பு

By: vaithegi Sun, 17 July 2022 11:31:08 AM

மேட்டூர் அணை.. உபரி நீர் திறப்பின அளவு 1,00,000 லிருந்து 1,05,000 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: கேரள மற்றும் கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மிக தீவிரமடைந்தது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக நேற்று காலை 10 மணிக்கு அணையின் முழுகொள்ளளவான 120 அடியை எட்டி அணை நிரம்பியது.

இதனை யடுத்து அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 1 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையில் இருந்து உபரி நீர் திறப்பின அளவு 1,00,000 கன அடியிலிருந்து 1,05,000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

cubic feet. mettur dam,surplus water , கன அடி.மேட்டூர் அணை,உபரி நீர்

மேலும் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து மிக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்றும், யாரும் செல்பி எடுக்க ஆற்றில் இறங்காதீர்கள் என்வும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :