Advertisement

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12,500 கனஅடியாக அதிகரிப்பு

By: vaithegi Thu, 17 Aug 2023 09:54:38 AM

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12,500 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்றது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அணைகளிலிருந்து காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு முறையாக திறந்து விடப்படவில்லை என தமிழ்நாடு அரசு புகார் தெரிவித்தது.எனவே இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை உடனடியாக வழங்குமாறு கர்நாடகாவுக்கு ஆணை உத்தரவிட்டது.

இதனை கர்நாடகா அரசு அமல்படுத்தாததால் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாடு அரசின் அழுத்தம் காரணமாக காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவை தற்போது கர்நாடக அரசு அதிகரிக்கிறது.

okanagan,neervarathu ,ஒகேனக்கல்,நீர்வரத்து

இதையடுத்து நேற்று காலை கே ஆர் எஸ் அணையிலிருந்து 9136 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது 13,473 கனியாக உயர்ந்துள்ளது. கபினி அணையிலிருந்து 5000 கன அடி திறக்கப்பட்டு வருகிறது. இரு அணைகளிலிருந்து மொத்தமாக 18,473 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 10ஆயிரம் கன அடியில் இருந்து 12,500 கன அடியாக அதிகரித்தது. கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Tags :