Advertisement

பணவீக்கம் காரணமாக உணவு பொருட்கள் விலை உயர்வு

By: Nagaraj Fri, 18 Nov 2022 11:12:27 PM

பணவீக்கம் காரணமாக உணவு பொருட்கள் விலை உயர்வு

கனடா: பணவீக்கம் காரணமாக கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்து செல்லும் போக்கினை அவதானிக்க முடிகின்றது. கடந்த 2019ம் ஆண்டு முதல் மளிகைப் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக உயர்வடைந்துள்ளன.

கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் மளிகைப் பொருட்களின் விலைகள் 11.4 வீதமாக பதிவாகியுள்ளது என்பதுடன் இது 1981ம் ஆண்டின் பின்னர் பதிவான அதிக வீதமாகும்.

eggs,coffee,tea,fish,meat,groceries ,முட்டை, காபி, தேயிலை, மீன், இறைச்சி, உணவுப்பொருட்கள்

மாஜரீன், பேஸ்டா, பட்டர், பால் உற்பத்திகள், முட்டை, காபி, தேயிலை, மரக்கறி, பழ வகைகள், மீன், இறைச்சி போன்ற உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன.


கனடாவில் இவ்வாறு உணவுப் பொருட்கள் விலை உயர்வடைந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். முக்கியமான உணவுப் பொருட்கள் இவ்வாறு விலை உயர்ந்துள்ளது மக்களை அவதிக்குள்ளாக்கி உள்ளது.

Tags :
|
|
|
|
|