Advertisement

எரிவாயு சிலிண்டர் மானியம் அதிகரிப்பு

By: vaithegi Sat, 25 Mar 2023 10:01:21 AM

எரிவாயு சிலிண்டர் மானியம் அதிகரிப்பு

இந்தியா: எரிவாயு சிலிண்டர் மானியம் ரூ.200 உயர்த்தப்பட்டுள்ளதாக பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு .... ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றப்படுவது வழக்கம்.

சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் , டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொண்டு வருகின்றன.

இதனை அடுத்து இதில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படும் நிலையில், கேஸ் சிலிண்டர்களின் விலை மாதமாதம் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

subsidy,gas cylinder ,மானியம் ,எரிவாயு சிலிண்டர்

அந்தவகையில் மார்ச்சில் சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது. எனவே அதன்படி ரூ. 1068 ஆக இருந்த சமையல் சிலிண்டர் விலை தற்போது ரூ. 1,118.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுவருகின்றன. அவ்வாறு வழங்கப்படும் வீட்டு உபயோக பயன்பாடுகளுக்கான கேஸ் சிலிண்டர்களுக்கு மானியம் ரூ.200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 35 லட்சம் பேருக்கு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படுவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Tags :