Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மோட்டார் வாகனப்பதிவு கட்டணம் அதிகரிப்பு... மக்கள் அதிருப்தி

மோட்டார் வாகனப்பதிவு கட்டணம் அதிகரிப்பு... மக்கள் அதிருப்தி

By: Nagaraj Fri, 18 Nov 2022 12:54:09 PM

மோட்டார் வாகனப்பதிவு கட்டணம் அதிகரிப்பு... மக்கள் அதிருப்தி

இலங்கை: இன்று 18ம் தேதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மோட்டார் வாகனப் பதிவுக் கட்டணம் மற்றும் ஏனைய கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பொருளாதாரத்தில் நெருக்கடியான சூழலில் உள்ள போது இதுபோன்ற கட்டண உயர்வு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர்.

சாதாரண முறையின் கீழ் வாகனங்களை பதிவு செய்ய 2,000 ரூபாய் கட்டணமும், முன்னுரிமை அடிப்படையிலான கட்டணம் 3,000 ரூபாயாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

registration fee,vehicle,increase,notification,from today ,பதிவு கட்டணம், வாகனம், அதிகரிப்பு, அறிவிப்பு, இன்று முதல்

அத்துடன் ஒருநாள் சேவையின் கீழ், வாகனங்களை பதிவு செய்வதற்கான கட்டணம் 4,000 ரூபாயாகவும் தாமதமாகி செலுத்தப்படும் பதிவுக் கட்டணங்கள் பல்வேறு கட்டங்களாக அதிகரிக்கப்படவுள்ளன.

அவ்வாறு தாமதக்கட்டணமாக மகிழுந்துக்கு நாளொன்றுக்கு 100 ரூபாயும், உந்துருளிக்கு 50 ரூபாயும் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பதிவு செய்யப்பட்ட வாகனச் சான்றிதழின் விவரங்களை மாற்றுவதற்கு 3,000 கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :