Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாரணாசிக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு... முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்

வாரணாசிக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு... முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்

By: Nagaraj Tue, 20 Dec 2022 12:08:46 PM

வாரணாசிக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு... முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்

லக்னோ: உத்திரபிரதேச மாநிலம் காசி விஸ்வநாதர் கோயிலின் புதிய வளாகம் திறக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைகிறது. முன்னதாக வாரணாசிக்கு ஆண்டுக்கு 1 கோடி பேர் வந்து செல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு சாவான் மாதத்தில் ஒரு கோடி பேர் மட்டுமே வாரணாசிக்கு வந்துள்ளனர் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உ.பி.யின் டூர் ஆபரேட்டர்கள் சங்க 37வது ஆண்டு மாநாடு தலைநகர் லக்னோவில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:

chief minister adityanath,development work is completed,temple in ayodhya,when its construction, ,அயோத்தியில், ஆன்மீக சுற்றுலா, போர்க்கால அடிப்படை, ராமர் கோவில்


உலகிலேயே பழமையான காசி (வாரணாசி) நகரம் நம்மிடம் உள்ளது. காசி விஸ்வநாதர் கோயிலின் புதிய வளாகம் திறக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைகிறது. முன்னதாக வாரணாசிக்கு ஆண்டுக்கு 1 கோடி பேர் வந்து செல்வார்கள்.

ஆனால் இந்த ஆண்டு சாவான் மாதத்தில் ஒரு கோடி பேர் மட்டுமே வாரணாசிக்கு வந்துள்ளனர். அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.


2024ம் ஆண்டுக்குள் இதன் கட்டுமானம் மற்றும் மேம்பாட்டு பணிகள் முடிவடையும் போது, இங்கு ஆன்மீக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரிக்கும். இவ்வாறு முதல்வர் ஆதித்யநாத் கூறினார்.

Tags :