Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தெலுங்கானா மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் அதிகரிப்பு

தெலுங்கானா மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் அதிகரிப்பு

By: vaithegi Wed, 30 Aug 2023 3:15:44 PM

தெலுங்கானா மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் அதிகரிப்பு

தெலுங்கானா : தெலுங்கானா மாநிலத்தில் ஆசரா ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இணைந்து உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

அதாவது, மாநிலம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என்று பல மாதங்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஓய்வூதியம் ரூ.3,016லிருந்து, ரூ. 4,016 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

pension,telangana ,ஓய்வூதியம் ,தெலுங்கானா


இதனால், மாநிலத்தில் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் வழங்கக்கோரி பல விண்ணப்பங்கள் பெறப்படுவதாக தகவல் ஒன்று வெளியிடப்படுகிறது. அதாவது, மனநலம் குன்றியவர்கள், செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள், பார்வையற்றவர்கள், பகுதியளவு பார்வையற்றவர்கள் ஆகிய பிரிவின் கீழ் மட்டுமே முழு ஓய்வூதிய தொகையை பெற முடியும்.

இதையடுத்து இது தவிர்த்து செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் 51% வீதத்தில் மட்டுமே ஓய்வூதியம் பெற தகுதி உடையவர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். மேலும், மீ சேவை மூலமாக மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பித்தவர்கள் சதேர முகங்களில் உள்ள மருத்துவர்களால் சோதனை செய்யப்பட்டு அதன் பின் சான்றிதழ்கள் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது

Tags :