Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோயம்பேடு சிறப்பு சந்தையில் ஆயுத பூஜைக்காக வாங்கப்படும் முக்கிய பொருட்களின் விலை உயர்வு

கோயம்பேடு சிறப்பு சந்தையில் ஆயுத பூஜைக்காக வாங்கப்படும் முக்கிய பொருட்களின் விலை உயர்வு

By: vaithegi Tue, 04 Oct 2022 7:18:28 PM

கோயம்பேடு சிறப்பு சந்தையில் ஆயுத பூஜைக்காக வாங்கப்படும் முக்கிய பொருட்களின் விலை உயர்வு

சென்னை: ஆயுத பூஜைக்காக வாங்கப்படும் முக்கிய பொருட்களின் விலை உயர்வு ... கொரோனா தொற்றின் காரணமாக 2 ஆண்டுகள் கழித்து ஆயுத பூஜைக்கான சிறப்பு சந்தை கோயம்பேடு சந்தையில் 10 நாட்களுக்கு செயல்பட்டு வருகிறது. ஆயுத பூஜையையொட்டி இந்த சந்தையில் தற்போது விற்பனை களைகட்டியுள்ளது.

இதனை அடுத்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பூஜைக்குரிய பொருட்களை வாங்கிச்செல்கின்றனர். ஆயுத பூஜைக்காக வாங்கப்படும் முக்கிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

ayudha pujai,koyambedu special market ,ஆயுத பூஜை,கோயம்பேடு சிறப்பு சந்தை

இதையடுத்து பூக்களை பொறுத்தவரையில் மல்லி, கனகாம்பரம் கிலோ ரூ.1200, சாமந்தி ரூ.500, ரோஜா ரூ.200 முதல் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடவுளுக்கு படைக்கக்கூடிய பொரியானது ஒரு மூட்டைரூ.340 முதல் ரூ.450க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வாழைக்கன்று ஒரு கட்டு ரூ.70 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பூஜை பொருட்களின் தேவை அதிகரித்துள்ளதால், விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Tags :