Advertisement

தொடர்மழை .. காய்கறிகளின் விலை உயர்வு

By: vaithegi Thu, 14 Sept 2023 3:02:03 PM

தொடர்மழை  .. காய்கறிகளின் விலை உயர்வு


சென்னை: தமிழகத்தில் கடந்த 1 வாரமாகவே பருவமழை பெய்து வரும் நிலையில் காற்கறிகளின் விளைச்சல் நன்றாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். ஆனால், அதிக விளைச்சல் காரணமாக வெண்டைக்காய் போன்ற சில காய்கறிகள் கிலோவுக்கு ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே போன்று, தற்போது தொடர்மழை காரணமாக அவரைக்காய் விளைச்சல் தேனி மாவட்டத்தின் மலை கிராமங்களில் இரட்டிப்பாகியுள்ளது. கொள்முதல் அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் அவரைக்காய் விலையும் இரட்டிப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

continuous rain,vegetable ,தொடர்மழை  ,காய்கறி


அதாவது, 4 நாட்களுக்கு முன்பு வரை அவரைக்காய் கிலோ ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், தேனி, ஆண்டிப்பட்டி, சின்னமனூர் ஆகிய சந்தைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு ஏலம் விடப்பட்டு அதிக லாபம் பெற்றுள்ளதாக விவசாயிகள் சற்று மகிழ்ச்சியடைந்து உள்ளனர். இதையடுத்து அடுத்தடுத்த நாட்களில் விலை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :