வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் அதிகரிப்பு
By: Nagaraj Sat, 08 Apr 2023 10:57:42 AM
கொழும்பு: வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கடந்த மாதம் 568.3 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் தொகை ஆயிரத்து 413.2 மில்லியன் டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Tags :
workers |
report |