Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் உள்ள அரசு மருத்துவர்களின் ஓய்வு வயது அதிகரிப்பு

இந்தியாவில் உள்ள அரசு மருத்துவர்களின் ஓய்வு வயது அதிகரிப்பு

By: vaithegi Wed, 11 Oct 2023 4:05:48 PM

இந்தியாவில் உள்ள அரசு மருத்துவர்களின் ஓய்வு வயது அதிகரிப்பு


இந்தியா: ஓய்வு வயது 62 லிருந்து 65 ஆக உயர்வு ... இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவ காலி பணியிடங்கள் எதுவும் நிரப்பப்படாத நிலையில் மருத்துவத்துறையில் போதுமான மருத்துவர்கள் இல்லாமல் கடுமையான நெருக்கடி ஏற்பட்டு கொண்டு வருகிறது.

இந்த நிலையில், மருத்துவர்களின் பற்றாக்குறையை காரணம் காட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே மருத்துவர்களின் ஓய்வு வயதை 62 லிருந்து 65 ஆக அதிகரிக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது மருத்துவர்களின் ஓய்வு வயதை 62 லிருந்து 65 ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

retirement age,medical department , ஓய்வு வயது ,மருத்துவத்துறை

மருத்துவர்கள் 65 வயதிற்கு முன்பாகவே விருப்ப ஓய்வு பெற விரும்பினால் அதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இது மட்டுமில்லாமல், மருத்துவர்களுக்கான ஓய்வு வயது 65 ஆக உயர்த்தியது மத்திய மற்றும் மாநில அரசின் கீழ் பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து, இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் ஓய்வு வயது 60 ஆக இருக்கும் நிலையில் அந்த மாநிலத்திலும் ஓய்வு வயது 65 ஆக மாற்றப்பட்டு உள்ளது.

Tags :