Advertisement

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை அதிகரிப்பு

By: vaithegi Mon, 16 Oct 2023 4:01:49 PM

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை அதிகரிப்பு

சென்னை:மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ. 2000 ஆக உயர்வு .. தமிழகத்தில் இன்று மாற்று திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதையடுத்து இக்கூட்டத்தின் போது பேசிய முதல்வர் முக ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை நிலை நாட்டும் வகையில் திமுக தலைமையிலான அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் மாற்றுத்திறனாளிகளின் அடிப்படை உரிமைகளை காக்கும் 5 ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறினார்.மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 64 கோடி செலவில் நல திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.

scholarship,disabled ,உதவித்தொகை ,மாற்றுத்திறனாளிகள்


இதனை அடுத்து வரும் நாட்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை 2,000 ஆக உயர்த்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் 22 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அடுத்ததாக மனநல பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக இடைநிலை பராமரிப்பு மையம் மற்றும் ‘மீண்டும் இல்லம்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு குடியிருப்பில் தரைத்தளத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Tags :