Advertisement

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு அதிகரிப்பு

By: Monisha Thu, 12 Nov 2020 12:39:22 PM

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு 7,348 கன அடியிலிருந்து 7,582 கன அடியாக இன்று அதிகரித்துள்ளது

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் அளவு குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 9-ம் தேதி அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரத்து 274 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று முன்தினம் வினாடிக்கு 9 ஆயிரத்து 432 கன அடியாக குறைந்துள்ளது.

mettur dam,cauvery,rain,irrigation,irrigation ,மேட்டூர் அணை,காவிரி,மழை,பாசனம்,நீர்வரத்து

இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு 7,348 கன அடியிலிருந்து 7,582 கன அடியாக இன்று அதிகரித்துள்ளது. மேட்டுர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடியாகும். இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 94.42 அடியாக உள்ளது.

அணையில் இருந்து பாசனத்திற்காக மொத்தம் 12,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது மேட்டுர் அணையில் 57.85 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது.

Tags :
|