Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.90 லட்சமாக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.90 லட்சமாக அதிகரிப்பு

By: Monisha Mon, 01 June 2020 10:45:06 AM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.90 லட்சமாக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 535 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து 91 ஆயிரத்து 819 பேர் குணமடைந்துள்ளனர். 93 ஆயிரத்து 322 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவில் நேற்று 230 பேர் உயிரிழந்ததையடுத்து, பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 394 ஆக உயர்ந்துள்ளது.

உலக அளவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 9-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது.

india,coronavirus,casualty figures,maharashtra,death toll ,இந்தியா,கொரோனா வைரஸ்,பாதிப்பு எண்ணிக்கை,மகாராஷ்டிரா,பலியானவர்கள் எண்ணிக்கை

அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலத்தில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 67,655 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 29,329 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 333ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 12,757ஆகவும் அதிகரித்துள்ளது. 3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 19,844 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,478 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 16,779 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,919 பேர் குணமடைந்தனர்.

Tags :
|