Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

By: Monisha Sat, 22 Aug 2020 10:53:16 AM

செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 67 ஆயிரத்து 430 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 413 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 430 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆயிரத்து 737 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 19 ஆயிரத்து 743 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 628 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

chengalpattu,kanchipuram,tiruvallur,corona virus,infection ,செங்கல்பட்டு,காஞ்சீபுரம்,திருவள்ளூர்,கொரோனா வைரஸ்,பாதிப்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 220 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 31 ஆக உள்ளது. இவர்களில் 12 ஆயிரத்து 413 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். நேற்று 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத்தொடர்ந்து, மாவட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. 2 ஆயிரத்து 418 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 369 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆயிரத்து 756 ஆக உள்ளது. இவர்களில் 17 ஆயிரத்து 467 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். நேற்று 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது. 3 ஆயிரத்து 923 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags :