Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

By: Nagaraj Fri, 10 July 2020 6:54:39 PM

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

புனர்வாழ்வு மையத்தில் கொரோனா அதிகரிப்பு... கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த மறுவாழ்வு மையத்திலுள்ள கைதிகளிடமிருந்து கொரோனா நோய்த்தொற்றுகள் அதிகம் பதிவாகும் போக்கு காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இவ்விடயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டுமெனவும் அனில் ஜாசிங்க வலியுறுத்தியுள்ளார்.

sri lanka,corona,rehabilitation,increase,recovered ,இலங்கை, கொரோனா, புனர்வாழ்வு, அதிகரிப்பு, குணமடைந்தோர்

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் ஒருவர் கடந்த 24 மணிநேரத்தில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாட்டில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,980 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 2350 பேரில் 359 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளத்துடன் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|