Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தொற்றில் இருந்து மீட்கப்படுபவர்களின் விகிதம் அதிகரிப்பு - லாவ் அகர்வால்

கொரோனா தொற்றில் இருந்து மீட்கப்படுபவர்களின் விகிதம் அதிகரிப்பு - லாவ் அகர்வால்

By: Monisha Wed, 27 May 2020 10:10:16 AM

கொரோனா தொற்றில் இருந்து மீட்கப்படுபவர்களின் விகிதம் அதிகரிப்பு - லாவ் அகர்வால்

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

மத்திய அரசின் கட்டுப்பாட்டு செயல்பாடுகளாலும், சிறந்த சிகிச்சை முறைகளாலும் கொரோனா தொற்றில் இருந்து மீட்கப்படுபவர்களின் விகிதமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் மீட்பு விகிதம் 7.10 % முதல் 41.61% வரை இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

india,corona virus,recovery rate increase,department of health,lav agarwal ,இந்தியா,கொரோனா வைரஸ்,மீட்பு விகிதம் அதிகரிப்பு,சுகாதாரத் துறை,லாவ் அகர்வால்

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், கொரோனாதொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 7.10 சதவீதமாக இருந்தது. தற்போது அது அதிகரித்து 41.61 சதவீதமாக உயர்ந்துள்ளது.

முதல் ஊரடங்கில் 7.1%, இரண்டாவது 11.42%, 26.59% மூன்றாவது ஊரடங்கு நிலையில் இருந்த மீட்பு வீதம் இப்போது 41.61% ஆக உள்ளது. இதனால் பலியானோர் விகிதம் குறைந்து வருகிறது என தெரிவித்தார்.

மேலும், இந்தியா ஒரு நாளைக்கு சராசரியாக 1.1 லட்சம் மாதிரிகளை சோதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|